காணாமல் போனோர் தொடர்பிலான அறிக்கைகள் நிறைவு
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தயாரிப்பானது நிறைவடைந்துள்ளதாக இந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பில்ஆராய்வதற்கு கடந்த ஆட்சியின் போது மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய வடக்கு, கிழக்கு பகுதிகளில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுவிடம் 20,000இற்கும் அதிகமான முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, இராணுவ தரப்பைச் சார்ந்த 5000 பேரிடமும் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
மேலும், குறித்த சாட்சிகள், விசாரணைகள் என்பவற்றிட்கு அமைய அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக நாள் ஒன்றை ஒதுக்கித் தறுமாரு கோரிய கடிதம் ஒன்று இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








