Breaking News

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வலியுறுத்து



ஜெனீவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா மீது அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் நிஸா தேஷாய் பிஷ்வால் உட்பட அமெரிக்க இராஜதந்திரிகளை இன்று சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். 

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சு நடத்தியதோடு, ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்த சந்திப்பின்போது, யுத்தக் குற்ற விசாரணை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலார் தொடர்பிலான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலிநொஸ்கியும் பங்கேற்றுள்ளார்.