நாளை பிரித்தானியா புறப்படுகிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொ ள்ளவுள்ளார். பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே இலங்கை ஜனாதிபதி லண்டன் செல்லவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது புதல்வியான தரணி சிறிசேன, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் கல்வி கற்று பட்டம் பெறவுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்லும் ஜனாதிபதி, வரும் 16ஆம் திகதி நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








