Breaking News

இலங்கை விவகாரத்தில் ஐ.நா வின் நிலைப்பாட்டில் மாற்றம்: அனந்தி



இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்னும் தலைப்பில் இடம் பெற்ற கருத்துப்பகிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றோம்.

யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையானதொன்றாக காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநியாக நான் அதைத்தான் கேட்கின்றேன்.

காணமலாக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பாக ஒரு வெளிப்படையான கருத்து ஒன்றினை அரசாங்கத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் எங்களுக்கும், உங்களுக்குமான இடைவெளி சற்று அதிகமானது போன்று காணப்படுகின்றது’ என தெரிவித்துள்ளார்.