Breaking News

அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் உடையார்கட்டு மக்கள்! (படங்கள் இணைப்பு)



முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உடையார்கட்டு தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு தெற்கு குரவில்,உடையார்கட்டு கிழக்கு ஆகிய பகுதிகளில் சுமார் 950 ற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தி அடைந்தும் இதுவரையும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

இங்குள்ள  வீதிகள் எதுவும் புனரமைக்கப்படவில்லை,  மழை காலங்களில் இவ்வீதியூடாக பயணிக்கும் பொழுது பாடசாலை மாணவர்கள் உட்பட இப்பகுதி மக்கள் பெரும் அவஸ்த்தைப்படுகின்றனர்.அத்தோடு சில பகுதிகளுக்க மின்சாரமும் வழங்ககப்படவில்லை.

கடந்த அரசாங்கத்தின் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் எங்களுடைய கிராமத்தை எட்டிக் கூட பாக்கவில்லை தேர்தல் காலங்களில் மட்டும் தங்களுடைய கிராமத்தை தேடிவரும் அரசியல் வாதிகள் தேர்தல் முடிந்ததும் தங்களுடைய கிராமம் ஒன்று இருப்பதையே மறந்து விடுகிற்றனர் எத்தனையே மனுக்கள் கடிதங்கள் உரிய தரப்பினரிடம் கொடுத்தும் எந்தவித பிரியோசனமும் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .

எனவே மேற்படி கிராமத்திற்கு அத்தகைய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு இப்பகுதி மக்கள் கேட்டு நிற்கின்றனர்.