Breaking News

இலங்கையின் உறுதிமொழிகளை நிராகரித்த உருத்திரகுமாரன்!



போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்பு லிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார்.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஐக்கிய நாடுகள் பேரவையில் வெளியிட்ட அறிக்கையை மையமாகக்கொண்டே இந்த நிராகரிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது உட்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தவறிவிட்டதாக உருத்திரகுமாரன் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.