Breaking News

காணாமல் போனோர் குறித்து போலி தகவல் வழங்குவோருக்கு கடூழிய சிறை



காணாமல் போனவர்களை உறுதிசெய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை இவ்வருடத்தில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் பணியகம் அமைக்கப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் தரவுகள் திரட்டப்படவுள்ளன. அதன்போது தவறான தகவல்களை வழங்குவோருக்கு ஐந்தாண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.