Breaking News

வடக்கில் இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை



வட மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நீண்ட காலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களை வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும்,

அதன் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த மாகாணங்களின் பிரதானிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய செயலணியொன்றினை அமைத்து அதன் சிபார்சின் பெயரில் நடவடிக்கைகளினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.