இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை - THAMILKINGDOM இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை - THAMILKINGDOM
 • Latest News

  இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை

  பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட்
  அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  லஸ்கர் ஈ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) அமைப்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் சுபைர் அலைஸ் நைக் முகமட், அப்துல் வகாப், அர்ஷாட் மற்றும் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  இவர்கள் 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்த போது, லாகூர் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் 2008ம் ஆண்டு லாகூர் மூன் மார்க்கெட் மீதான தாக்குதல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  தொடர்புடைய முன்னைய காணொளி
  முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top