5000, 600ஆக மாறியது எப்படி? கொந்தளித்த மஹிந்த!
கடந்த 28ஆம் திகதி களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.
குறித்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித் அபேகுணவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கூட்டத்திற்காக கிட்டத்தட்ட 5000 பேர் கலந்துக் கொள்வதாக ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்திருந்தார்.
எனினும் இந்த கூட்டத்தில் 600 பேரை மாத்திரமே ரோஹித அபேகுணவர்தனவினால் அழைத்து வர முடிந்துள்ளது.
இதனால் கோபமடைந்த மஹிந்த கூட்டத்தின் இறுதியில் ரோஹித அபேகுணவர்தனவை அழைத்த மஹிந்த “மக்கள் கூட்டம் இல்லாத கூட்டங்களுக்கு தன்மை அழைக்க வேண்டாம் எனவும், முடியாவிட்டால் அமைதியாக இருந்து விடவும் என கூறிவிட்டு மஹிந்த அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.