Breaking News

வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க பிக்குகளுக்கு உரிமை உள்ளதாம்!



வடக்கில் எந்தப் பகுதியிலும் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கோ, புத்தர் சிலைகளை வைப்பதற்கோ உரிமை உள்ளது என்று சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை தற்போது, விகாரையாக மாற்றப்பட்டு வருவது குறித்து, கிளிநொச்சி மக்கள், அமைச்சர் சுவாமிநாதனிடம் முறையிட்டனர்.

அப்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வடக்கில் தற்போது உள்ள புத்தர் சிலைகளையோ, பௌத்த விகாரைகளையே அகற்றுவதற்கு எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது.

வடக்கு மாகாணத்தில், விகாரைகளை கட்டுவதற்கும், புத்தர் சிலைகளை வைப்பதற்கும் பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களுக்கு உரிமை உள்ளது.

இவற்றை அகற்ற முயன்றால், அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.