முகாம்களை அகற்ற முடியாது : இராணுவம் - THAMILKINGDOM முகாம்களை அகற்ற முடியாது : இராணுவம் - THAMILKINGDOM
 • Latest News

  முகாம்களை அகற்ற முடியாது : இராணுவம்  வடக்கில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை கவனத்தில் கொண்ட பின்னர் தேவையற்ற காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் தயாராக இருக்கின்றது. ஆனால் தேசிய பாதுகாப்பிற்கு தேவையான காணிகளை அகற்ற முடியாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். 

  இராணுவ முகாம்கள் என்பன திட்டமிடப்பட்டு அமைக்கப்படுகின்றன. அவற்றுக்கு குறிப்பிட்டளவு ஏக்கர் காணிகள் அவசியமாகும். தேசிய பாதுகாப்பு என்று வரும்போது இந்தக் காணிகள் மிகவும் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில இன்று நடைபெற்ற வராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முகாம்களை அகற்ற முடியாது : இராணுவம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top