Breaking News

இருவரும் File களை மறைப்பவர்கள் - மைத்திரியின் உரைக்கு JVP விமர்ஷனம்



மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலத்தில் தன்னிடம் “ பைல்கள்” இருப்பதாக கூறிய விதத்திலேயே, தற்பொழுது மைத்திரிபால சிறிசேனவும் புதிய கட்சி உருவாக்கினால் இரகசியங்களை வெளியிடுவதாக கூறியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சி உருவாக்காது போனால் அந்த இரகசியங்களை அவர் பாதுகாப்பாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதிகளுக்கு உருவாக்கும் ஒரு வகையான நோய்களே இவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வருட நிறைவு விழாவின் போது மாத்தறையில் ஜனாதிபதி வெளியிட்டிருந்த கருத்து குறித்து கூறுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறு தவறுகளை மறைப்பது மக்கள் அளித்த அணைக்கு எதிரானது அல்லவா? இதிலிருந்து இரு ஜனாதிபதிகளும் ஒரே மாதிரியானவர்கள் என்பது தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.