Breaking News

வடக்கில் சிங்கள மயமாக்கல்! எதிர்த்து பாரிய போராட்டம் நடத்த தீர்மானம்!

தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல்
மற்றும் பௌத்த சின்னங்களை அமைப்பதனை எதிர்த்து மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றினை முன்னெடுப்பதற்காக வடக்கிலுள்ள பொதுஅமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் பேராசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்டங்கலாக முக்கிய பிரதிநிதிகள் இன்று இதுபற்றி யாழ் பொது நூலகத்தில் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்க்கிங்டத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்றைய சூழலில் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் பௌத்தமத சின்னங்கள் அமைப்பது தொடர்பில் இன்று யாழ்.பொது நூலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.




இந்தநிலையில் குறித்த சந்திப்பின் நிறைவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி யாழில் இந்த மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும், பௌத்த சின்னங்களை நிறுவியும், பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

மீள்குடியேற்றம் செய்யாது மக்களின் காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வருகின்றனர். அதனைக் கண்டித்தும் மாபெரும் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போது காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் ஒன்றினை அமைப்பதாக கூறியிருந்தாலும், காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான பதில் எதனையும் அரசாங்கம் இதுவரையில் தெரிவிக்கவில்லை.

ஆனால், காணாமல் போனவர்கள் பற்றி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேட்ட போது, இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டுமென நல்லிணக்க ஒருங்கிணைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க கூறியிருக்கின்றார்.

ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஏற்ப சர்வதேச நீதிபதிகளையும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அரசாங்கம் கூறியிருக்கின்றது. எனவே, இவ்வாறான விடயங்களைக் கண்டித்தும், அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியினை முன்னெடுக்க தீர்;மானித்துள்ளோம்.

இந்த அரசாங்கமும், முன்னைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைக்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல்களை நிறுத்த வேண்டுமென்றும், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளனர்.

வடமாகாணத்தினை சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு கொண்டு வந்து, கலாசார அழிப்பினை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படாவிடின், தொடர்ச்சியாக, வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் மக்கள் போராட்டமாக மேற்கொள்ள பின் நிற்கமாட்டோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.