Breaking News

மஹிந்த அணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!



குருணாகலையில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில், சுதந்திரக் கட்சியிலிருந்து சென்று புதிய கட்சியை உருவாக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு அதிர்ச்சி காத்தி ருப்பதாக, தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து குறிப்பிட்ட அவர்,
65வது மாநாட்டின் போது சுதந்திரக் கட்சியின் தலைவரினால் பல விசேட அறிவிப்புக்கள் விடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

குருணாகலையில் நடைபெறவுள்ள இந்த கூட்டமானது வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு பாரிய கூட்டமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஒரு முறை கட்சியை விட்டு சென்று மீண்டும் கட்சிக்கே வர வேண்டிய நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய ஷாந்த பண்டார, கட்சிக்குள் சகலருக்கும் பிரச்சினை இருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும் எந்தவொரு நபருக்கும் கட்சியை இரண்டாக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.