வடக்கு ஆளுநரின் செயல் தான்தோன்றித்தனமானது – வடக்கு முதல்வர்
வடக்கில் முதலீட்டை ஊக்குவிக்க வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயால் இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவிருக்கும் முதலீட்டா ளர் மாநாடு அவரது தான்தோன்றி த்தனமான செயற்பாடு என வடக்கு மாகாண முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், குறித்த மாநாடு தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளப்போவதில்லையெனத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசானது வடக்கு முதலீட்டினை தனது கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுத்தும் நோக்கிலேயே இது மாகாணசபைக்குத் தெரியாது ஆளுநரினூடாக மேற்கொள்ளப்படும் திட்டம் எனவும் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








