முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக தீர்மானம் எடுப்பது கட்சிக்கு ஆபத்து- மஹிந்த
நடைபவனியை நடாத்துவதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துவிட்டு ,பின்னர் நடைபவனியின் போது கட்சி உறுப்பினர்கள் கூறிய கருத்துக்களை வைத்து அவர்களுக்கு எதிராக தீர்மானங்கள் எடுக்க முன்வந்துள்ளமையானது, கட்சியின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது என தென்கொரிய விஜயத்திலுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
சனத் நிஷாந்தவுக்கு எதிராக ஸ்ரீ ல.சு.க. மேற்கொள்ள தீர்மானித்துள்ள ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.








