பிரபாகரனுக்கு மரணச் சான்றிதழ் எங்கே! நாடாளுமன்றில் சிவமோகன் துணிச்சல் கேள்வி!
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், அவருக்கு இது வரையிலும் மரணச் சான்றிதழ் வழங்க வில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் ஒரு போராளி என்பதற்காக அவரின் உயிரிழப்பை மறைத்திருந்தாலும், டி.என்.ஏ பரிசோதனை செய்ததாக அரசு அறிவித்தது.
எனினும், அந்த டி.என்.ஏ சான்றிதழை கூட வழங்கவில்லை. இந்திய அரசு பிரபாகரனின் மரணச் சான்றிதழை கோரி நின்றது. எனினும், அதனை வழங்க முடியாத நிலையே காணப்படுகின்றது.
இது ஒரு வெளிப்படையான உண்மை. எனவே, பிரபாகரனின் மரணச் சான்றிதழை இந்த உயரிய சபையில் முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.