Breaking News

புலிகளையும் வளர்த்துவிட்டு இந்திய படையினரையும் அழித்தது காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் போது விடுதலை புலிகளுக்கு உதவியதாகவும் இந்திய இராணுவ படையினர் மூலம் உதவியதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ் ஆட்சியின் போது வெடிபொருட்களையும் இராணுவ படைத்தரப்பினரையும் வழங்கி புலிகளுக்கு உதவும் வகையில் செயற்பட்டிருந்தது பின்னர் சமாதானத்திற்கான இந்திய படைகளையும் இலங்கைக்கு அனுப்பியிருந்தது. அதன் காரணமாகவே சுமார் 1000 இந்திய படையினர்கள் கொல்லப்பட்டனர் என அமைச்சர் வெங்கையா நாயிடு தெரிவித்துள்ளார்.

தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் காங்கிரஸ் கட்சி போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியே தமது ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தது.

பாரதீய ஜனதா கட்சியில் காங்கிரஸ்ட்கும் எந்தவிதமான நேரடியான தொடர்பும் கிடையாது எதிர்கட்சிகளுக்கிடையிலான நிகழ்ச்சி நிரல் எப்போதும் முறன்பாடானதாகவே அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எப்போதும் வாக்கு வங்கியை மட்டுமே கருத்திற்கொண்டது. தற்போது காங்கிரஸ் கட்சியின் உப தலைவராகவுள்ள ராகுல் காந்தி தேவையற்ற உள்நோக்கங்களுடன் கட்சிய கொண்டு செல்கின்றார்.

அத்தோடு தீவிரவாதம் தொடர்பில் அக்கட்சி மென்மையான போக்கினை கடைபிடித்து வருகின்றது. தேசியத்துவம் தொடர்பில் கடுமையான போக்கினை கடைப்படிக்கின்றது. மேலும் இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்துவது தொடர்பிலோ அல்லது சமூகத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வது பற்றியோ சிந்தித்ததில்லை. 

அரசியலை மையப்படுத்தி பிரிவினை வாதத்தினை உருவாக்குவதிலேயே குறித்த கட்சி பேர்பெற்றது. மேலும் பயங்கரவாதிகள் அடிப்படைவாதிகள் மற்றும் இனவாதிகளுக்கு இக்கட்சி ஆதரவு வழங்கி வந்துள்ளது என்றார்