Breaking News

யாழ்ப்பாணத்திற்கு போய் சொல்லு அங்க முட்டினா இங்க வெடிக்கும் எண்டு...!!


பேராதனை பல்கலைக்கழகத்தில்
சிங்கள மாணவர்கள் இன ரீதியில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாதிக்ப்பட்ட தமிழ் மாணவர்களில் ஒருவர் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திற்கு போய் சொல்லு அங்க முட்டினா இங்க வெடிக்கும் எண்டு, உங்களுக்கே இவ்வளவு இருக்கும் போது எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? 
நாங்கள்........இல்ல எண்டதையும் உங்கட ஆக்களுக்கு சொல்லு.
இவ்வாறு சொல்லிக்கொண்டே பேராதனையில் சிங்கள மாணவர்கள் கூறிக்கொண்டு அடித்திருக்கிறார்கள்.

அத்தோடு பல்கலையில் கற்கும் தமிழ்ப் பெண்களையும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார்கள் என்றும் இது நெடுக அங்க நடக்குது. என்றும் அந்த மாணவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் தொடர்ந்து தமிழ் மாணவர்கள் பேராதனை பல்கலையில் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.




முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்