விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத தொகையொன்று ஓமந்தை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.
வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை தோண்டிய போது ஓமந்தை – பாலமோட்டை பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஓமந்தை காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து அந்த ஆயுத தொகை மீட்கப்பட்டுள்ளது. இதன் போது எல்.எம்.ஜி மற்றும் எம்.ஜி.எம்.ஜி ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
மீட்க்கப்பட்ட துப்பாக்கிகள் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவு துருப்பிடித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.