அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழிலும், கொழும்பிலும் போராட்டங்கள்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்ஷனின் 4 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
அவரது படுகொலையை நினைவு கூர்ந்தும் அதற்கு நினைவு கூர்ந்தும், ஏனைய அரசயில் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியுமே இன்று போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்க முன்பாகவும், காலை 10.30 இற்கு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.








