Breaking News

கிளிநொச்சி சந்தையில் பாரிய தீ விபத்து(படங்கள்)


கிளிநொச்சியில் அங்காடி வளாகத்தில் அமைந்துள்ள
நூறுக்கு மேற்பட்ட கடைத் தொகுதிகளைக் கொண்ட வணிக வளாகம் மீது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து அழிந்துவிட்டதாக அங்கிருந்து தமிழ்க்கிங்டொத்திற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலேயும் தீ பரவியவண்ணம் உள்ளது அதனை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளையும் மீறி தீ பரவி எரிகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து மேலதிக தீயணைக்கும் வீரர்கள் கிளிநொச்சி நோக்கி தற்போது சென்றுகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.