விக்னேஷ்வரனின் அறிவிப்பைக் கண்டித்து தென் மாகாண சபையில் தீர்மானம்
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தொடர்பில் தென் மாகாண சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனவாதத்தைத் தூண்டும் விக்னேஷ்வரனின் அறிவிப்பை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் சமில் விதானச்சி முன்மொழிந்துள்ளார். சபை உறுப்பினர் அசோக தனவங்ச இப்பிரேரணையை வழிமொழிந்துள்ளார்.
சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சி உட்பட சகல கட்சிகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.