Breaking News

உத்தேச அரசியல் யாப்பில் எனக்கு சந்தேகம் – மஹிந்த



கொல்வின் ஆர். டி. சில்வாவுக்கு அன்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு சுமார் 3 வருட காலம் தேவைப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒருசில மாதங்களாவது எடுக்கவில்லயெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதனால், தனக்கு இந்த புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என தான் கருதவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கிலுள்ள நிகழ்வுகள் சிலவற்றை வெளியிடக் கூடாது என ஊடகங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, வடக்கில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ உடுதும்பர விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.