Breaking News

நேதாஜி விமான விபத்தில் தான் இறந்தார்: இங்கிலாந்து இணையதளம் தகவல்

இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவரும், சுதந்திர போராட்ட வீரருமான நேதாஜியின் மரணம் தொடர்பாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், அவரது இறப்பு இன்னும் மர்மமாகவே நீடித்து வருகிறது. அவர் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில்தான் இறந்தார் என இங்கிலாந்து இணையதளம் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தாரா? என விசாரிக்க குழு ஒன்றை அமைத்து இருப்பதாக அப்போதைய வைஸ்ராய் லார்டு ஆர்ச்சிபால்டு வேவல், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந்தேதி தனது மந்திரிகளிடம் தெரிவித்தார். இந்த மந்திரிசபை கூட்டம் தொடர்பாக பின்னாளில் கண்டெடுக்கப்பட்ட கையெழுத்து பிரதியில், நேதாஜியின் மரணம் உண்மைதான் என கூறப்பட்டு இருந்தது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் வெளியுறவு செயலாளர் மால்கம் ரிப்கின்ட் கடந்த 1995-ம் ஆண்டு லார்டு ஆர்ச்சருக்கு எழுதிய கடிதத்தின் பிரதியையும் அந்த இணையதளம் வெளியிட்டு இருந்தது.