Breaking News

சம்பந்தன் சுமந்திரனுக்கு ஜெனீவாவில் இறுதி அஞ்சலி(காணொளி)

ஐ.நாவில் தற்போது 33ஆவது கூட்டத்தொடர்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பலத்த எதிர்பார்ப்பினை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில், மிகவும் அமைதியான போக்கு ஐ.நா சபையின் உள்ளகத்தில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியின்போது த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் ஆகியோரின் அண்மைக்காலச்செயற்பாடுகள் ஆத்திரம்கொள்ள வைத்துள்ளதாக தெரிவித்திருந்த இளைஞர்கள் அவர்களது உருவப்படங்களையும் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்றுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.


இவற்றுக்கு முழுமையான நீதி வெகு விரைவில் கிடைக்க வேண்டும் எனவும், இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் முழக்கமிட்டவாறு ஐ.நா முன்றலில் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.