Breaking News

மைத்திரி , ரணிலுக்கு மஹிந்த கோரிக்கை!



ஐக்கிய தேசிய கட்சியையும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் கலைத்து புதிய கட்சியை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 70ஆவது மாநாட்டில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அந்தக் கட்சியின் ஸ்தாபகரின் மகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.

அதேபோன்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டிலும் ஐக்கிய தேசிய கட்சியினர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இப்படி கட்சிகள் இருந்து என்ன பலன். இந்த இரண்டு கட்சிகளையும் கலைத்து புதிய கட்சியை உருவாக்குவதே சிறந்தது.

இவர்கள் ஶ்ரீ லங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சியென்ற பெயரிலேயே கட்சியை உருவாக்க போகிறார்களாம்.

அப்போது உண்மையான ஶ்ரீ லங்கா கட்சிக்காரர்கள் என்னுடன் இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.