முன்னாள் சிறந்த வீரர் டில்ஷானின் மகன் ‘டில்ஸ்கூப்’ இனால் சதம் விளாசி மீளவும் அணிக்கு
இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம் டில்ஷான் இனது மகனான ரெசந்து திலகரத்ன சதம் விளாசியுள்ளார்.
கோட்டை, சாந்த தோமஸ் வித்தியாலயத்திற்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டியில் ரெசந்து திலகரத்ன ரோயல் கல்லூரி சார்பில் ஆட்டமிழக்காது 114 புள்ளிகளை குவித்திருந்தார். அணியானது 65 ஓவர்களில் 320 புள்ளிகளை பெற்று முன்னணி வகித்திருந்தது.
மேலும், எதிர்காலத்தில் டில்ஸ்கூப் எனும் பெயரினை மீளவும் சர்வதேசத்திற்கு தலைநிமிர்த்திக் காட்ட ரெசந்து திலகரத்னவால் முடியும் என இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மேலும் எதிர்வு கூறுகின்றனர்.