வடக்கிலுள்ள ஒர் இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது- பாதுகாப்பு அமைச்சர்
வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அரசாங்கம் ஒருபோதும் உடன்பட மாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் எழுக தமிழ் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கிலுள்ள ஒரு முகாம் கூட அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹர்த்தால், எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் முன்வைக்கும் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை அரசாங்கம் ஒருபோதும் கருத்தில் கொள்ளாது. நாட்டின் பாதுகாப்பை சந்தேகத்துக்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் முன்னெடுக்காது.
இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் பெரும் தடையாக அமைகின்றது எனவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.