மஹிந்த மலேசியா பயணம் : புத்ரா மையத்தில் கொடும்பாவி எரிப்பு!
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்று குவித்த கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேயின் மலேசிய வருகைக்கு தங்களின் கடும் எதிர்ப்பைக் கட்டும் வகையில் மக்கள் புத்ரா உலக வாணிக மையத்தின் முன்கூடினர்.
இங்கு இன்று தொடங்கும் அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை எதிர்க்கட்சிகளின் குழுவுக்கு தலை மையேற்று ராஜபக்சே இங்கு வருகிறார் என்ற செய்தி ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் மலேசியத் தமிழர்கள் தங்களின் ஆட்சேபத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று வருகிறார் என்ற செய்தி தமிழர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. காலையிலேயே தமிழர்கள் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே கூடத் தொடங்கினர். மேலும் ராஜபக்சேயின் கொடும்பாவியை எரித்து அவர்கள் தங்களின் எதிர்ப்பைப் புலப்படுத்தினர்.
ஒரு போர்க் குற்றவாளியாக கருதப்படவேண்டிய ராஜபக்சேயை மலேசியாவுக்குள் அரசாங்கம் அனுமதித்திருக்கவே கூடாது. இந்நாட்டு தமிழர்களின் மனதைப் புண்படுத்துகிற செயலாகவே இது அமைந்துள்ளது என அரசுசாரா அமைப்புக்கள் கருத்து ரைத்து ள்ளன.