Breaking News

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி – உறுதிப்படுத்தினார் மகிந்த

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிரணி தனித்துப் போட்டியிடும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.


தாமதிக்காமல் தேர்தல்களை நடத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்துக்குச் சவால் விடுத்துள்ள அவர், எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிரணி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறும் என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.