Breaking News

தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்!



அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறும் வகையிலான அம்சங்கள் உள்ளடங்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் யாழ். விஜயம் செய்த அமெரிக்க தூதுக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரதி அமெரிக்க தூதுவர் ரொபட் ஹில்டன் உட்பட தூதுக் குழுவொன்று வட மாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து கண்டறிவதற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்தூதுக் குழுவுடனான கலந்துரையாடல் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றுள்ளது. வடக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஷ்வரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.