முன்னாள் ஜனாதிபதிக்கு நான்கு டயர்களை வழங்கிய பிரதமர்!
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தனது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கான வசதிகளை, அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதி மூலமே பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ வசதிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாகவே பெற்றுக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொடர்பு கொண்டு தனது உத்தியோகபூர்வ காருக்கு நான்கு புதிய டயர்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தனக்கு தேவையான பாதுகாப்பு போன்ற விடயங்களையும் பிரதமர் ஊடாகவே, முன்னாள் ஜனாதிபதி மேற்கொள்வதாக பேசப்படுகிறது.
இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகன, பிரதமரிடம் விசாரித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் காணப்படும் தனிப்பட்ட நெருக்கம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி என்ற மரியாதை காரணமாக அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக பிரதமர் ரணில் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச பல சந்தர்ப்பங்களில் பிரதமரை தொடர்பு கொண்டு தனது தேவையான வசதிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு தேவையான வசதிகளை தான் வழங்கி அவரை பாதுகாத்து கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்திலும் கூறியிருந்தார்.