Breaking News

நிரந்­தர நல்­லி­ணக்­கமே ஐ.நா.வின் விருப்பம்! என்­கிறார் மூன்



இலங்­கையின் அனைத்து இனங்­க­ளுக்­கு­மான பொதுஅடை­யா­ளத்தை நோக்­கிய நகர்­வுகள் அத்­தி­யா­வ­சி­ய­மாகும். இதனை அடை­வ­தற்கு உள்நாட்டு அர­சாங்­கத்தின் தற்­போ­தைய முன்­னெ­டுப்­புகள் தொடர்பில் மகிழ்­ச்சி­ய­டைய முடி­கின்­றது என ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் தெரி­வித்தார்.

இலங்­கையின் நல்­லி­ணக்கம், நிலை­யான சமா­தானம் உள்­ளிட்ட அனைத்து இன மக்­களின் சக­வாழ்வு குறித்து ஐக்­கிய நாடுகள் சபை கரி­சனை கொண்­டுள்­ள­மை­யி­னா­லேயே இரண்­டா­வது தட­ வை­யா­கவும் இங்கு வந்­துள்ளேன். இந்த விட­யத் தில் இளை­ஞர்­களின் பங்­க­ளிப்பு இன்­றி­மை­யா­ததாகும் எனவும் பான் கீ மூன் குறிப்­பிட்டார்.

மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ யத்தை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று காலியில் இடம்­பெற்ற இளையோர் மாநாட்டில் கலந்துக் கொண்டார். நல்­லி­ணக்கம் மற்றும் சக­வாழ்வில் இளை­யோரின் பங்­க­ளிப்பு என்ற தொனிப்­பொ­ருளில் அதில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஐ நா செய­லாளர் நாயகம் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

இது எனது இலங்­கைக்­கான இரண்­டா­வது விஜ­ய­மாகும். இலங்­கையில் போர் முடி­வ­டைந்­த­வுடன் 2009 ஆம் ஆண்டில் இங்கு முதல் தட­வை­யாக வந்தேன். தற்­போது இலங்கை அபி­வி­ருத்­திற்­கான பய­ணத்தை முன்­னெ­டுக்­கின்­றது. மேலும் நல்­லி­ணக்கம் மற்றும் சக­வாழ்வு போன்ற விட­யங்­களின் முக்­கி­யத்­துவம் கருதி பல்­வேறு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்பின் போது தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் சக­வாழ்வில் இளை­யோர்­களின் முக்­கி­யத்தும் குறித்து வலி­யு­றுத்த உள்ளேன். இளை­ஞர்­களே நாளை தலை­வர்கள் . உங்கள் கன­வு­க­ளுக்கு உயிர் கொடுத்து நாட்டின் எதிர்­கா­லத்­திற்­காக செயற்­ப­டுங்கள் . இன , மத , மொழி வேறு­பா­டு­களை மறந்து இலக்­கு­களை பாருங்கள் அப்­போது இலங்­கையை முன்­னேற்ற பாதையில் கொண்டுச் செல்ல முடியும்.

ஐக்­கிய நாடுகள் சபை உலக இளை­யோர்­களின் முக்­கி­யத்­துவம் குறித்து கருத்தில் கொண்டு தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளது. மோதல்­களின் போது உயி­ரி­ழப்­பதும் இளை­ஞர்­க­ளே­யாவர். அதே போன்று அதன் பின்­ன­ரான அமைதி சூழலில் அனைத்­தையும் இழந்­த­வர்­க­ளாக நிற்­பதும் இவர்­கள்தான். எனவே 70 ஆண்­டு­களின் பின்னர் இளை­ஞர்­களின் முக்­கி­யத்­துவம் கருதி ஐ. நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யது. இதே போன்று பெண்­களின் முக்­கி­யத்­துவும் கரு­தியும் தீர்­மா­னத்தை நிறை­வேற்றி செயற்­ப­டுத்­தி­யுள்­ளது. பாது­காப்பு சபையில் இவற்­றுக்கு கிடைக்­கப்­பெற்ற ஆத­ரவு வர­வேற்க தக்­க­தாகும்.

நல்­லி­ணக்­கத்தின் பாதைய மிகவும் அவ­சி­ய­மாகும் . தர­மான கல்வி இளை­யோ­ருக்கு மிகவும் அவ­சி­ய­மாகும் . இலங்­கையை போன்று கொரி­யா­விலும் போர் ஏற்­பட்­டது. அதில் 3 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மா­ன­வர்கள் உயி­ரி­ழந்­தனர். அப்­போது எனக்கு 6 வயது . பசி உள்­ளிட்ட இன்­னோ­ரன்ன வலி­களை எதிர் கொண்டோம். அப்­போது ஐ. நா.வின் துணை நிறு­வ­னங்கள் பல்­வேறு மனி­தா­வி­மான நட­வ­டிக்கை முன்­னெ­டுத்­தன. ஆனால் கல்வி கற்க வேண்டும் என்ற பசி எனக்கு அதி­க­மா­கவே காணப்­பட்­டது. அதன் பலனை இன்று காண முடிகின்றது. தரமான கல்வி மிகவும் அவசியமானதாகும்.

இலங்கையை பொறுத்த வரையில் தற்போதைய நல்லிணக்கத்திற்கான தேவை இளையோர்களிடத்தில் ஆரம்பிக்கபட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை . இலங்கையின் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் மிகவும் கரிசனை கொண்டுள்ளது என்றார்.