கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் கைது செய்யப்பட்ட 158 பேருக்கு என்ன நடந்தது!
கடந்த 1990ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் கைது செய்யப்பட்ட 158 பேருக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட்டு, அது குறித்த உண்மைகள் அவர்களது உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார்.
26 வருடங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து மீண்டும் தனது கருத்துக்களை பதிவுசெய்யும் போதே பின்வருமாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்
இன்று காணாமல் போனோர்கள் பற்றி அரசாங்கம் மிகவும் சிறப்பான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்றை திறந்தது என்பது மிக முக்கியமான அம்சமாகும்.