மஹிந்த தலைமையில் மூன்றாவது சுதந்திரப் போராட்டம் விரைவில்- பந்துல
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மூன்றாவது சுதந்திரப் போராட்டமொன்றை நாட்டில் ஆம்பிக்க தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர்களின் கொள்கை மற்றும் வழிகாட்டல் என்பவற்றின் கீழால் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கினிகத்ஹேன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.