Breaking News

பஞ்சாபில் குண்டு வெடித்து 2 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரை அடுத்த சாஸ்திரிநகரில் உள்ள ஒரு பாலத்தின் அருகே சிலர் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டுகளில் இருந்து பித்தளையை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சக்தி வாய்ந்த ஒரு குண்டு வெடித்து சிதறியது.

இதில் அங்கு பித்தளை பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் உள்பட 2 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.