Breaking News

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு



யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்று காலை நல்லூரில் இந்த நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதமிருந்து வீரச்சாவை தழுவினார்.

இன்று 29 ஆவது ஆண்டு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.