முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் விபத்து : இரு இளைஞர்கள் பலி
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட கொத்தம்பியகுளம் சந்தி பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்
மல்லாவியில் இருந்து துணுக்காய் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் கொத்தம்பியகுளம் சந்தி பகுதியில் உள்ள வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
மல்லாவி, தேறாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஜெகநாதன் கோபிராஜ் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
இதேவேளை கிளிநொச்சி ஏ 9 வீதியின் ஆனையிறவு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த ஹயஸ் ரக வாகனத்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞர் நேருக்கு நேர் மோதியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
வடமாராட்சி கிழக்கு உடுத்துறையைச் சோ்ந்த இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.