மலேசியாவில் மஹிந்த நடத்திய இரகசிய சந்திப்பு அம்பலம்!
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் பல அதிர்ச்சியான சம்பவங்களை எதிர்கொண்டார்.
இந்நிலையில் மலேசியா விஜயத்தின் போது மஹிந்த பல சந்திப்புக்களை மேற்கொண்டதாக தெரிய வருகிறது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நிதி பங்களிப்பாளரான அமைச்சர் தயாகமகே மற்றும் அவரது மனைவியுடன் இரகசிய சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.
மலேசிய தூதுவரின் வீட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு பின்னணியில் பாரிய அரசியல் கொடுக்கல் வாங்கல் ஒன்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி ஒப்பந்தங்களை தயா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டதென்பது பலர் அறிந்த ஒரு விடயமாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்சர்களின் ஊழல் மற்றும் மோசடி வெளியே வருவதனால் தயா கமகேவுக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி ஊழல் மோசடிகளை முடி மறைக்க வேண்டும் என இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளர்.
தனக்கு சொந்தமான செவனகல சீனி தொழிற்சாலையை அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக, கடந்த காலம் முழுவதும் மஹிந்த ராஜபக்ச உட்பட குடும்பத்தை தயா கமகே விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் தயா கமகே இவ்வாறு மஹிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதன் ஊடாக அவர்களுக்குள் காணப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களின் நிலை தெளிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.