காவிரி பிரச்சினை – களத்தில் கலவர தடுப்பு சிறப்பு பிரிவினர்
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு 10 கம்பெனிகள் கொண்ட கலவர தடுப்பு சிறப்பு பிரிவை உடனடியாக நேற்று(12) அம்மாநிலத்திற்கு அனுப்பியது.
காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் தமிழர்களின் வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு 10 கம்பெனிகள் கொண்ட கலவர தடுப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த துணை ராணுவ படையை கர்நாடக மாநிலத்துக்கு உடனடியாக நேற்று அனுப்பியது. ஒரு கம்பெனியில் 100 பேர் என ஆயிரம் பேர் கர்நாடகாவில் கலவரத்தை ஒடுக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 5 முதல் 10 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர், இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீசார் தயாராக இருப்பதாகவும், கர்நாடகா, தமிழக அரசு கேட்டுக்கொண்டால் அந்த படைகளை அனுப்ப தயாராக உள்ளதாகவும் உயர் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.