கடைகள், சந்தைகளைப் பூட்டி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்குக! - பேரவை கோரிக்கை
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெற இருக்கும் “எழுக தமிழ்” மாபெரும் பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களைப் பூட்டி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண் டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையால் நேற்றிரவு விடுக்கப் பட்ட விசேட செய்திக்குறிப்பில் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.