Breaking News

யாரும் யாரிடமும் ஏமாறப் போவதுமில்லை ; சம்பந்தன்



எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. யாரும் யாரிடமும் ஏமாறப் போவதுமில்லை. யாரையும் யாரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாது என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பாரியளவு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பகிர்வதன் மூலமே மாகாண அமைச்சுக்கள் தங்கள் அதிகாரங்களுக்கு உட்பட்ட மக்களுக்கான சேவைகளை பூரணமாகச் செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஏற்பட இருக்கின்ற அரசியல் தீர்வு இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் எல்லா இன மதத்தவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.

எவரையும் எவரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை நாம் பெற முடியாது. சுருக்கமாகச் சொல்வதென்றால் எவரும் எவரையும் ஏமாற்றவில்லை. எவரும் எவரையும் ஏமாற்றுவதன் மூலமாக ஒரு திருப்திகரமான நியாயமான நிரந்தரமான நிதானமான அரசியல் தீர்வை நாம் அடைய முடியாது.

உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வு மக்கள் முன் சர்வசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அரசியல் சாசனம் மக்களின் ஆணையைப் பெற்ற பின்பு தான் அமுலுக்கு வரும். நிறைவேற்றப்படும்.

இத்தகைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் பக்குவமாகவும் நிதானமாகவும் நடக்க வேண்டிய காலத்தின் தேவை காணப்படுகின்றது என்றார்.