Breaking News

வரலாற்றுத் தவறை இழைக்காது பேரவையின் பேரணியில் பெருந்திரளாவோம் ..!!

தமிழ்த் தலைவர்கள்-கட்சிகள் பொது அமைப்புக்கள் ஒன்றுபட்டு எதிர்வரும் 24-ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் எனும் மாபெரும் மக்கள் பேரணிக்கு சைவத் தமிழ் மக்கள் யாவரும் அணி திரண்டு வலுச் சேர்க்க வேண்டும் என வீணாகான குருபீடத்தின் சந்நிதாச்சாரியார் சிவஸ்ரீ. சபா. வாசுதேவக்குருக்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

தமிழர் தம் தேசத்தில் பூர்வீகமாக காலதிகாலமாக பேணிக்காத்து வந்த சைவத் தமிழ் வழிபாட்டுத் தல ங்களும் வழிபாடுகளும் இன்று புறந்தள்ளப்பட்டு வருவதுடன் மாற்றிடாக புதிது புதிதாக விகாரைகளும் சிலைகளும் வழிபாட்டு முறைமைகளும் புகுத்தப்பட்டு வருவதை காணமுடிகிறது.

இது யுத்தம் நிறைவடை ந்த பிற்பாடு நடைபெறுகின்ற ஆக்கிரமிப்பு யுத்தமாகும். சமாதான புரிந்துணர்வு மிக்க நல்லாட்சி அரசின் காலத்தினை சாதகமாக்கிக் கொண்டு தமிழர், தமிழ் தலைவர்கள் தம் வாய்களைத்திறந்தால் சமாதானம் நல்லாட்சி குலைந்து விடும் என்னும் மாயையைக் காட்டி தமிழர்களை பேசாமடந்தையாகளாக வைத்துக்கொண்டு மிக கச்சிதமாக சமய கலாசார அழிப்பு யுத்தத்தினை நடத்தி வருகின்றார்கள். இதனை ஒருபொழுதும் நாம் ஏற்க முடியாது.

எனவே எமது சைவத்தமிழர் சார்பிலான மறுப்புக்கருத்துக்களை இச்சந்தர்ப்பத்தில் நாம் வெளிப்படுத்துதல் அவசியமாகும். இல்லா விட்டால் நாமும் வரலாற்று துரோகம் இழைத்தவர்களாகி விடுவோம்.
தமிழ்மக்கள் பேரவையினர் ஏற்பாட்டில் அனைத்து தமிழ் கட்சிகளும் தலைவர்களும் தமக்குள் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்டு ஓர் அணியாக அணிவகுத்து நிற்கும்போது அவர்களுக்கு நாம் வலுச்சேர்ப்பது எமது தார்மீக கடமையாகும்.

எனவே துறவிகள், குருமார்கள், ஆலய பரிபாலகர்கள், அறங்காவலர்கள், அடியார்கள், இந்து அமைப்பி னர்கள், இந்து இளைஞர் மன்றத்தினர்கள், அனைவரும் ஒன்று சேர்ந்து பேரணியின் முதன்மையாளர்களாக முன்னின்று பேரணிக்கு வலுச்சேர்க்க பெருந்திரளாக அணிதிரளுமாறு வீணாகான குருபீடம் சைவத்தமிழ் மக்களை அழைக்கின்றது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.