Breaking News

புலிகளின் எச்சங்களுக்கு புத்துயிர் கொடுக்க விக்னேஸ்வரன் முயற்சி..!!



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரனுக்கு எதிராக, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா.

பண்டாரகமவில் ஐதேக ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “வடக்கில் இறந்து போன புலிகளின் எச்சங்களுக்கு புத்துயிர் கொடுக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார்.

வடக்கிலுள்ள சராசரி குடிமகனின் தேவைகள் குறித்து விக்னேஸ்வரனுக்கு எந்தக் கவலையும் கிடையாது.

வடக்கிலுள்ள ஏனைய இனவாதிகளுடன் இணைந்துள்ள அவர் நாட்டில் ஒற்றுமை மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளைக் குழப்ப முயற்சிக்கிறார்.

விக்னேஸ்வரனின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாது. அந்தக் கோரிக்கைகளை நாட்டைப் பிளவுபடுத்தும்.

மூவினத்தவர்களும், கௌரவமாகவும், சமமான உரிமைகளுடனும் வாழுகின்ற சூழலை ஏற்படுத்தவே நாம் முயற்சிக்கிறோம். இதனை விக்னேஸ்வரனால் நிறுத்த முடியாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.