ஈழத் தமிழ்ப் பெண் இந்தியாவில் தீக்குளித்து உயிரிழப்பு
இந்தியாவின் கும்மிடிப்பூண்டி அகதிமுகாமில் வசித்துவந்த ஈழத் தமிழ் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், குருநகர் – ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகளான சரோன் கருண்சி (வயது – 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தமது கணவர் மற்றும் ஒன்றரை வயது நிரம்பிய குழந்தையுடன் கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் வசித்து வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தமது வீட்டில் தீமூட்டிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான சரோன் கருண்சி, உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் கண்டறிப்படாத நிலையில், கும்மிடிப்பூண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.