கர்நாடகாவிற்கு எதிராக நாம் தமிழர் கட்சி தொண்டர் தீ குளிப்பு
கர்நாடகா வன்முறையை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன பேரணி கட்சி தலைவர் சீமான் தலைமையில் நடந்தது.
பேரணியில் இயக்குனர் சீமான், அமீர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சென்னை எழும்பூரில் துவங்கிய பேரணி புதுப்பேட்டை அருகே வந்த போது, பேரணியில் வந்த 25 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர், திடீர் என தலையில்
மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு, கர்நாடகா ஒழிக என கூறி கொண்டு, தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியது. பேரணியில் வந்தவர்கள் வாலிபர் மீது எரிந்த தீயை அணைத்து, அருகிலுள்ள மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்றனர்.
கர்நாடகாவிற்கு எதிராக வாலிபர் ஒருவர் தீ குளித்த சம்பவத்தால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மாணவர் அமைப்பை சார்ந்த விக்னேஷ் என தெரியவந்துள்ளது.