Breaking News

பான் கீ மூனுக்கு எதிராக பேரினவாத அமைப்புக்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்



இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது வருகையினைக் கண்டித்தும், கொழும்பிலுள்ள ஐ.நா அலுவல கத்திற்கு எதிரில் இன்று (வியாழக்கிழமை) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க போவதில்லை என தெரிவித்து கடும் சிங்கள பேரினவாத அமைப்புக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமையிலான பேரினவாத அமைப்புக்களான ரவணாபலய அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.

இராணுவத்தை பழிவாங்கவும், கடந்த ஆட்சியாளர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் மண்டியிட வைப்பதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காகவுமே, பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும், அவர் நாளை யாழப்பாணத்திற்கு சென்று வடமாகாண ஆளுனர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.