நெருக்கடியில் உலக பொருளாதாரம்: சீன அதிபர் எச்சரிக்கை
ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த சீன அதிபர் ஷி ஜின்பிங், உலக பொருளாதாரம் நெருக்கடியான சூழலில் உள்ளதாக எச்சரித்துள்ளார்
சீன நகரமான ஹங்ஷூவில் பேசிய அவர், உலகின் இருபது பெரிய பொருளாதாரத்தை இணைப்பதில், சந்தை ஏற்ற இறக்கம், குறைவான முதலீடு மற்றும் அடுத்த தொழில்நுட்ப அல்லது தொழில் புரட்சி தொடர்பான சொற்ப சமிக்ஞை உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிபர் ஒபாமா உட்பட மாநாட்டில் கலந்துக் கொண்ட தலைவர்களுடன், தென் சீன கடல் பகுதியை சீனா உரிமை கோரும் பிரச்சினை குறித்து தனித்தனி பேச்சுவார்த்தை நடத்தினார் அதிபர் ஷி ஜின்பிங்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அரசியல் மட்டுமே சிரியாவின் நெருக்கடியை தீர்க்கும் எனக் கூறியுள்ளார்.